சாப்பிட்டதும் கண்டிப்பாக இந்த செயல்களை மட்டும் செய்யாதீர்கள்..!
1. சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.
Place it anywhere in the page body. You can find more info here.
2. சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.
3. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.
4. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.
5. சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.
'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };
6. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.
பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.
இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.
7. சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம்,
சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.
8. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.
9. சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.
#Healthtips
#Health365
கருத்துகள்
கருத்துரையிடுக