உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி ....
Place it anywhere in the page body. You can find more info here.
தேவையான பொருட்கள்::::
உளுந்து - 1 கப்
தேங்காய் பால் - 1 கப்
சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
செய்முறை::::
உளுந்தை நன்கு சுத்தம் செய்து, இதனுடன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊறவிடவும்.
இது நன்கு ஊறிய பிறகு, இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த உளுந்து மற்றும் வெந்தய கலவையை சேர்க்கவும்.
இதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதில் வெல்லம், ஏலக்காய், சுக்கு பொடி போன்றவற்றை கலக்கவும்.
இதனுடன் அரிசி மாவு சேர்த்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இவ்வாறு செய்தால் கஞ்சி ரெடி.
தற்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு கைப்பிடி துருவிய தேங்காவை தாளித்து, கஞ்சியில் சேர்க்கவும். அவ்வளவு தான் உளுந்தங்கஞ்சி தயார்....
கருத்துகள்
கருத்துரையிடுக