*உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா.....*
காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர் மெஷின் வைத்து தினமும் டெஸ்ட் செய்ய வேண்டுமா, மாத்திரைகள் எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும்?
ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension) என்று சொல்லக்கூடிய, ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடியபாதிப்பு இருக்கிறது. குடும்ப வரலாறு, வயதாவது, உடல் பருமன், மன அழுத்தம், புகைப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை இதற்கு
உணவில் உப்பைக் குறைத்தாலும், மன அழுத்தம் இருந்தாலோ, புகைப்பழக்கம் தொடர்ந்தாலோ, BP நிச்சயம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். தவிர, அவர்களுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமானது பல காலம் தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்களும், கண்களும்கூட பாதிக்கப்படலாம். எனவே, இதயம், மூளை, கண்கள், சிறுநீரகங்கள் என எல்லாமே ஆரோக்கியமாக இருக்க ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம்.
ரத்த அழுத்தமானது 120/80-க்குள் இருக்க வேண்டும். 121 முதல் 135 வரை (121/89 - 135/89)அதிகரிக்கும்போது உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி, ரத்த அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
140/90- என்பதைத் தொட்டுவிட்டால் மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும். வாழ்நாள் முழுவதும் மருந்துகளைஎடுத்துக்கொள்ளவேண்டும்.
மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்பற்றினால், ஒரு கட்டத்தில் மாத்திரைகளைநிறுத்தவும் வாய்ப்பு உள்ளது. BP அளவை மருத்துவரிடம் செக் செய்து கொள்வதே சிறந்தது.
அது தவிர்த்து பிபி பரிசோதிக்கும் மானிட்டரை வீட்டில் வைத்தும் அவ்வப்போது டெஸ்ட் செய்து பார்க்கலாம்.
#fblifestyle #ஆரோக்கியம் #உணவேமருந்து #பனங்கற்கண்டு #HealthTipsTamil #healthyeating
உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி .... Place it anywhere in the page body. You can find more info here. தேவையான பொருட்கள்:::: உளுந்து - 1 கப் தேங்காய் பால் - 1 கப் சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி அரிசி மாவு - 2 டீஸ்பூன் வெல்லம் - 1 கப் ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் செய்முறை:::: உளுந்தை நன்கு சுத்தம் செய்து, இதனுடன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊறவிடவும். இது நன்கு ஊறிய பிறகு, இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த உளுந்து மற்றும் வெந்தய கலவையை சேர்க்கவும். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் வெல்லம், ஏலக்காய், சுக்கு பொடி போன்றவற்றை கலக்கவும். இதனுடன் அரிசி மாவு சேர்த்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இவ்வாறு செய்தால் கஞ்சி ரெடி. தற்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு கைப்பிடி துருவிய தேங்காவை தாளித்து, கஞ்சியில் சேர்க்கவும். அவ்வளவு தான் உளுந்தங்கஞ்சி தயார்....

கருத்துகள்
கருத்துரையிடுக